மாவட்ட செய்திகள்

நாகை அன்னை சத்யா காப்பகத்தில் பொங்கல் விழா கலெக்டர் பிரவீன்நாயர் பங்கேற்பு + "||" + Pongal Festival Collector Pravinnayar participates in Naga Mother Mother Satya Archive

நாகை அன்னை சத்யா காப்பகத்தில் பொங்கல் விழா கலெக்டர் பிரவீன்நாயர் பங்கேற்பு

நாகை அன்னை சத்யா காப்பகத்தில் பொங்கல் விழா கலெக்டர் பிரவீன்நாயர் பங்கேற்பு
நாகை அன்னை சத்யா காப்பகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினார்.
நாகப்பட்டினம்,

நாகையில் உள்ள அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் தலைமை தாங்கி, காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு பொங்கல் மற்றும் இனிப்பு, கரும்பு துண்டுகள் வழங்கி கொண்டாடினார். மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார்.


விழாவில் கலெக்டர் பிரவீன்நாயர் பேசுகையில், நாகை மாவட்டத்தில் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது தாய், தந்தையர்களை இழந்த குழந்தைகள் அன்னை சத்யா அரசு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு, இந்த காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவு, உடை, கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. காப்பகத்தில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகளும் தன்னம்பிக்கையோடும், வைராக்கியத்துடனும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற இந்த பொங்கல் நன்னாளில் மனதார வாழ்த்துகிறேன் என்றார்.

உறுதுணையாக இருக்கும்

தொடர்ந்து அருகில் உள்ள அன்னை சத்யா முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் ஆதரவற்ற முதியோர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என அவர்களிடையே தெரிவித்தார்.

விழாவில் மாவட்ட சமூகநல அலுவலர் உமையாள் மற்றும் காப்பக பணியாளர்கள், குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல் மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
2. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
3. தர்மபுரி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
4. பக்தர்கள் அனுமதி இன்றி பிள்ளையார்பட்டியில் எளிமையாக நடந்த விநாயகர் சதுர்த்தி விழா
கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி பிள்ளையார்பட்டி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடைபெற்றது.
5. பொது இடங்களில் சிலை வைக்க தடை: வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
பொது இடங்களில் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சேலத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாக கொண்டாடினர்.