மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம்
மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குத்தாலம்,
மயிலாடுதுறை அருகே நீடூரில் பா.ம.க. தெற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் ஆறுமுகசாமி, கண்ணன், உத்திராவேல்முருகன், மணி, நடராஜன், விஜி, சிலம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். இதில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் விமல் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:-
மருத்துவ கல்லூரி
அனைத்து கிராமங்களிலும் கட்சியின் கிளைகள் அமைத்து கொடியேற்றுவது. நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை மயிலாடுதுறை அருகே நீடூரில் அமைக்க வேண்டும். நாகையில் இருந்து திருவாரூர் 25 கி.மீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது. திருவாரூரில் மருத்துவ கல்லூரி இருக்கும்போது, மிக அருகில் நாகையில் அதுவும் நாகை நாடாளுமன்ற தொகுதிக்குள்ளேயே 2-வது மருத்துவ கல்லூரி அமைப்பதை அரசு தவிர்க்க வேண்டும். தமிழகத்திலேயே தற்போது மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குள் மட்டுமே மருத்துவ கல்லூரி இல்லாத நிலை உள்ளது.
மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டால் மயிலாடுதுறை கோட்டம் மட்டுமல்லாமல் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகா பகுதி என 20 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். எனவே, மருத்துவத்தில் பின்தங்கிய பகுதியான மயிலாடுதுறையில் மிக விரைவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story