மாவட்ட செய்திகள்

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் பயங்கரம்விஷ ஊசி போட்டு மனைவி கொலைஅரசு ஆஸ்பத்திரி ஊழியர் கைது + "||" + Terror because of the interruption of counterfeit Wife injected with poison

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் பயங்கரம்விஷ ஊசி போட்டு மனைவி கொலைஅரசு ஆஸ்பத்திரி ஊழியர் கைது

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் பயங்கரம்விஷ ஊசி போட்டு மனைவி கொலைஅரசு ஆஸ்பத்திரி ஊழியர் கைது
ராமநகர் அருகே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் விஷ ஊசி போட்டு மனைவியை கொலை செய்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு, 

ராமநகர் அருகே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் விஷ ஊசி போட்டு மனைவியை கொலை செய்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அரசு ஆஸ்பத்திரி ஊழியர்

ராமநகர் மாவட்டம் ஐசூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வட்டரதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 30). இவரது மனைவி தீபா (23). ராமநகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக வெங்கடேஷ் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல அவர் வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். அவர் சென்ற பிறகு தீபா வீட்டில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வெங்கடேசுக்கும், ஐசூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து தீபாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

ஆனால் தீபா தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியாமல் இருந்தது. இதையடுத்து, வெங்கடேசை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது உடல் நலக்குறைவு காரணமாக தீபா இறந்திருக்கலாம் என்று போலீசாரிடம் கூறினார். ஆனாலும் சந்தேகத்தின் பேரில் வெங்கேடசிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். உடனே அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

கள்ளத்தொடர்பு

அதாவது ராமநகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் வெங்கடேசுக்கும், அங்கு பணியாற்றும் ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தீபாவுக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர் இளம்பெண்ணுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறியுள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆனாலும் இளம்பெண்ணுடனான கள்ளத்தொடர்பை வெங்கடேஷ் கைவிடவில்லை என்று தெரிகிறது.

இதுபற்றி அறிந்த தீபா, இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது குறித்து தனது குடும்பத்தினரிடம் சொல்ல போவதாக வெங்கடேசிடம் கூறியுள்ளார். இதனால் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக உள்ள தனது மனைவியை கொலை செய்ய வெங்கடேஷ் திட்டமிட்டு இருக்கிறார்.

விஷ ஊசி போட்டு கொலை

இதற்காக கடந்த 14-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு வந்து சில மாத்திரைகளை தீபாவுக்கு வலுக்கட்டாயமாக வெங்கடேஷ் கொடுத்துள்ளார். அந்த மாத்திரைகளை தின்ற அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே தீபாவை ஆஸ்பத்திரிக்கு வெங்கடேஷ் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்ததும் வெங்கடேஷ் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் நேற்று முன்தினம் அதிகாலையில் மருந்தில் விஷத்தை கலந்து, உடல் நலக்குறைவு இருப்பதால், ஊசி போட வேண்டும் என்று டாக்டர் கூறி இருப்பதாக தீபாவிடம் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

தனது கணவர் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருவதாலும், டாக்டர் கூறி இருக்கலாம் என்று கருதியும் தீபாவும் ஊசி போடுவதற்கு சம்மதித்துள்ளார். இதையடுத்து, விஷம் கலந்த ஊசியை செலுத்தி தீபாவை வெங்கடேஷ் கொலை செய்தது தெரியவந்தது.

உடல் நலக்குறைவால்...

அதே நேரத்தில் ஏற்கனவே மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்று 14-ந் தேதி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றதால், உடல் நலக்குறைவு காரணமாக தீபா இறந்து விட்டதாக நாடகமாட வெங்கடேஷ் திட்டமிட்டு உள்ளார். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மனைவியை விஷ ஊசி போட்டு கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். கைதான வெங்கடேஷ் மீது ஐசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.