வெள்ளப்பள்ளத்தில் ‘அம்மா’ இளைஞர் விளையாட்டு திட்டம் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்


வெள்ளப்பள்ளத்தில் ‘அம்மா’ இளைஞர் விளையாட்டு திட்டம் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 16 Jan 2020 11:00 PM GMT (Updated: 16 Jan 2020 7:48 PM GMT)

வெள்ளப்பள்ளத்தில் ‘அம்மா’ இளைஞர் விளையாட்டு திட்டத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்.

வேதாரண்யம்,

வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் வெள்ளப்பள்ளத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் துறை சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ‘அம்மா’ இளைஞர் விளையாட்டு திட்டம் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு நாகை கூடுதல் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா வரவேற்றார். விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு ‘அம்மா’ இளைஞர் விளையாட்டு திட்டத்தை கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார். பின்னர் அவர், வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

உள்ளாட்சி பிரதிநிதிகள்

விழாவில் தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றியக்குழு துணை தலைவர் ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இளவரசி, ஒன்றியக்குழு உறுப்பினர் கஸ்தூரி, வெள்ளப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி, முன்னாள் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் அழகப்பன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் தியாகராஜன், மலர்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் நன்றி கூறினார்.

விழாவிற்கு பிறகு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.3 லட்சமாக உயர்த்தி...

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பட்டா மனை இருப்பவர்களுக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் சொந்தமாக தனி வீடு கட்டிக்கொள்ள அனுமதி வழங்கி, கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆகியோர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக் கான நிதியை ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி அனுமதி வழங்கி உள்ளனர். இந்த அரிய வாய்ப்பினை மக்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story