பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி
கொடைக்கானலில், பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடந்தது.
கொடைக்கானல்,
பொங்கல் பண்டிகையையொட்டி கொடைக்கானலில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் படகு போட்டிகள் நட்சத்திர ஏரியில் நேற்று நடந்தது. போட்டிகளை முன்னாள் நகரசபை தலைவரும், நகர அ.தி.மு.க. செயலாளருமான ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மொத்தம் 4 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் சுற்றுலா பயணிகள், மாணவ-மாணவிகள் பலர் உற்சாகமாக கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மண்டல மேலாளர் டேவிட் பிரபாகரன் தலைமை தாங்கினார்.
கொடைக்கானல் தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் பூபாலன் வரவேற்றார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் தலா மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன.
அதில் முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர தி.மு.க. பிரமுகர்கள் ஜான் தாமஸ், வெங்கட்ராமன், அழகு வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story