மாவட்ட செய்திகள்

ஜேடர்பாளையம் படுகையணை ராஜா வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி + "||" + Jadarpalayam slaughterhouse sinks into the mouth of the king

ஜேடர்பாளையம் படுகையணை ராஜா வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி

ஜேடர்பாளையம் படுகையணை ராஜா வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி
ஜேடர்பாளையம் படுகையணை பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலியானார்.
பரமத்திவேலூர்,

நாமக்கல் அருகே உள்ள புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நவனி ஊராட்சியில் 1-வது வார்டு உறுப்பினராக தேர்வு பெற்று பதவியேற்றுக்கொண்டவர் குமார் (வயது 39). இவர் நேற்று தனது நண்பர்களுடன் ஜேடர்பாளையம் படுகையணை பூங்காவிற்கு சுற்றுலா வந்துள்ளார்.


பின்னர் படுகையணை பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்துள்ளனர். அப்போது குமார் மற்றும் புதுச்சத்திரத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் சரண் (24) ஆகிய இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் குமாரை காப்பாற்றி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சாவு

அடித்துச் செல்லப்பட்ட சரண் தண்ணீரில் மூழ்கி இறந்தார். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மீனவர்கள் உதவியுடன் அவர் பிணமாக மீட்கப்பட்டார்.

தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளியணை அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி தண்ணீர் குடிக்க சென்றபோது பரிதாபம்
வெள்ளியணை அருகே தண்ணீர் குடிக்க சென்றபோது பள்ளி மாணவர்கள் 2 பேர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
2. பழனி அருகே யானை மிதித்து முதியவர் பலி உடலை டோலி கட்டி தூக்கி வந்த பரிதாபம்
பழனி அருகே முதியவரை யானை மிதித்து கொன்றது. அவரது உடலை டோலி கட்டி வனத்துறையினர் தூக்கி வந்தனர்.
3. லாரி–மோட்டார்சைக்கிள் மோதலில் தொழிலாளி பலி ; லிப்டு கேட்டுச்சென்ற 2 வாலிபர்கள் படுகாயம்
சோளிங்கர் அருகே லாரி–மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. அவினாசி அருகே பயங்கரம்: லாரி மீது கார் மோதியது என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 6 பேர் பலி 2 பேர் படுகாயம்
அவினாசி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சேலத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த தாய்மாமாவும் சிக்கினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...