மாவட்ட செய்திகள்

கைதான பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பா? போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பேட்டி + "||" + IS apprehends arrested terrorists Is it related to the organization? Interview with Superintendent of Police Srinath

கைதான பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பா? போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பேட்டி

கைதான பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பா? போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பேட்டி
கைதான பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா? என்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.
நாகர்கோவில்,

குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8-ந் தேதி சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை செய்யப்பட் டார். இதுதொடர்பாக பயங்கரவாதிகள் தவுபிக், அப்துல் சமீம் ஆகிய இருவரையும் தேடி வந்தோம். இருவரையும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் அங்குள்ள போலீசார் உதவியுடன் கடந்த 15-ந் தேதி பிடித்தோம்.


16-ந் தேதி காலையில் களியக்காவிளை போலீஸ் நிலையம் கொண்டு வந்தோம். அதன்பிறகு தக்கலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தினோம். அப்போது, பயங்கரவாதிகளின் கூட்டாளிகளை கைது செய்ததற்கும், திட்டமிட்டு இருந்த சதி திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனதாலும் அரசு நிர்வாகத்தையும், காவல்துறையையும் பழிதீர்க்கவும், அச்சுறுத்தவும் தங்களுக்கு தெரிந்த களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக் கொன்றோம் என்று கூறியுள்ளனர்.

அமைப்பு பற்றி தகவல் இல்லை

அவர்கள் எந்த அமைப்பு என்பது பற்றிய முழு விவரம் தெரியவில்லை. எனவே அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியது உள்ளது. அதற்காக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்துள்ளோம். அவர்களிடம் முழு விசாரணை நடத்திய பிறகே இன்னும் பல தகவல்கள் தெரிய வரும்.

கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி இதுவரை பறிமுதல் செய்யப்படவில்லை. அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும். பயங்கரவாதிகள் அவர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தனர். அப்துல் சமீம் மீது 14 வழக்குகள் உள்ளன. குமரி மாவட்டத்திலும் கொலை முயற்சி உள்ளிட்ட சில வழக்குகள் உள்ளன. அவர்கள் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களா? என்பது குறித்து போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பிறகுதான் தெரிய வரும்.

போலீஸ் பாதுகாப்பு

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு உதவியவர்கள் தொடர்பாக சில தகவல்கள் கிடைத்துள்ளது. அவர்கள் யார்? என்பது குறித்து விசாரணைக்கு பிறகுதான் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘தமிழகத்தின் மேம்பாட்டுக்காக நானும், ரஜினியும் பேசிக்கொண்டு இருக்கிறோம்’ - தேர்தல் முன்னோட்ட அறிக்கையை வெளியிட்டு கமல்ஹாசன் பேட்டி
தமிழகத்தின் மேம்பாட்டுக்காக தானும், ரஜினிகாந்தும் பேசிக்கொண்டு இருப்பதாகவும், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தேர்தல் முன்னோட்ட அறிக்கையை வெளியிட்ட பின்னர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
2. டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று மோடி, அமித்ஷா பதவி விலக வேண்டும் தொல். திருமாவளவன் பேட்டி
டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று மோடி, அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று நாகர்கோவிலில் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
3. குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பேரணியால் கலவரத்தை தூண்ட பா.ஜ.க.வினர் திட்டமிடுகிறார்கள் கி.வீரமணி பேட்டி
குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பேரணியால், தமிழகத்தில் கலவரத்தை தூண்ட பா.ஜ.க.வினர் திட்டமிடுகிறார்கள் என கி.வீரமணி கூறினார்.
4. திருவாரூரில், 7-ந் தேதி நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்-அமைச்சருக்கு பட்டம் வழங்கப்படும் ரங்கநாதன் பேட்டி
திருவாரூரில், வருகிற 7-ந் தேதி நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்-அமைச்சருக்கு பட்டம் வழங்கப்படும் என்று மன்னார்குடி ரங்கநாதன் கூறினார்.
5. இந்தியா தோல்வி; உலகம் ஒன்றும் முடிந்து விடவில்லை: விராட் கோலி பேட்டி
டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் உலகம் ஒன்றும் முடிந்து விடவில்லை என விராட் கோலி பேட்டியளித்து உள்ளார்.