மாவட்ட செய்திகள்

மின் வேலியில் சிக்கி யானை சாவு விவசாயி கைது + "||" + Elephant death farmer arrested in electric fence

மின் வேலியில் சிக்கி யானை சாவு விவசாயி கைது

மின் வேலியில் சிக்கி யானை சாவு விவசாயி கைது
தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி யானை இறந்தது. இதுதொடர்பாக விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.
தாளவாடி,

தாளவாடியை அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட திகினாரை மலைக்கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. விவசாயி. இவருக்கு வனப்பகுதியையொட்டி தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அவர் மக்காச்சோளத்தை பயிரிட்டு உள்ளார். தோட்டத்துக்குள் புகுந்து மக்காச்சோள பயிரை வனவிலங்குகள் நாசம் செய்துவிடாமல் தடுப்பதற்காக அதைச்சுற்றிலும் அவர் மின்வேலி அமைத்து உள்ளார்.


இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒன்று ரங்கசாமி தோட்டத்துக்குள் புகுந்தது. அப்போது அந்த யானை மின்சாரம் தாக்கி இறந்தது.

கைது

இதுபற்றி அறிந்தும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானையை பார்வையிட்டனர். மேலும் கால்நடை டாக்டர் அசோகன் சம்பவ இடத்துக்கு வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் யானை அந்த பகுதியில் குழிதோண்டி புதைக்கப்பட்டது. இதுபற்றி டாக்டர் அசோகன் கூறுகையில், ‘மின் வேலியில் சிக்கி இறந்த யானை 20 வயது உடைய பெண் யானை ஆகும்,’ என்றார்.

இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு 2 பேர் படுகாயம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். உடன் சென்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. பவானி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி 2 பெண்கள் சாவு 7 பேர் படுகாயம்
பவானி அருகே தடுப்பு சுவரில் கார் மோதியதில் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. கடலூர் முதுநகர் அருகே விபத்து: கார் கவிழ்ந்து பெண் சாவு சாலையோரம் ஆடு மேய்த்தவரும் பலியான பரிதாபம்
கடலூர் முதுநகர் அருகே கார் கவிழ்ந்து பெண் ஒருவரும், சாலையோரம் ஆடு மேய்த்துக்கொண்டி ருந்தவரும் பலியானார்கள். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4. பல்கலைக்கழகம் அருகே பரிதாபம் கணவருடன் கோவிலுக்கு சென்ற பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி சாவு
குல தெய்வ கோவிலுக்கு சென்று விட்டு கணவருடன் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
5. மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: என்ஜினீயர் உள்பட 2 பேர் சாவு
அரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.