மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் தகராறில் டிரைவர் வெட்டிக்கொலை - 5 பேர் கைது + "||" + In a counterfeit love dispute driver Hacked Murder Five arrested

கள்ளக்காதல் தகராறில் டிரைவர் வெட்டிக்கொலை - 5 பேர் கைது

கள்ளக்காதல் தகராறில் டிரைவர் வெட்டிக்கொலை - 5 பேர் கைது
உத்திரமேரூரில் கள்ளக் காதல் தகராறில் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, 

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கிழக்கு கமலா தெருவிலுள்ள திரையரங்கம் எதிரே உள்ள ஒரு கடையின் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள் கத்தியால் வெட்டினர். இதை பார்த்த அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்தப்படி ஓடினர். இதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் உத்திரமேரூர் தண்டு காரத்தெருவை சேர்ந்த கார் டிரைவர் மதன் (வயது26)என்பது விசாரணையில் தெரியவந்தது.

அவருக்கும் அதே தெருவை சேர்ந்த தவ்லத் என்கிற தசரதன் (30) என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக தசரதன் உள்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் தசரதன் உத்திரமேரூர் அடுத்துள்ள ஒரு தனியார் தொழிநுட்ப கல்லூரியில் படிக்கும்போது அவருடன் படித்த மதுராந்தகத்தை சேர்ந்த அஸ்வினி என்ற பெண்ணை காதலித்துள்ளார். இந்த விவகாரம் அஸ்வினியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது,

இருவரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அஸ்வினியின் பெற்றோர் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இந்தநிலையில் இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர், இதனால் வேறு வழியில்லாமல் இரு குடும்பத்தினரும் இருவருக்கும் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திருமணம் முடிந்து அஸ்வினி உத்திரமேரூர் தாண்டுகார தெருவிலுள்ள அவரது கணவர் தசரதன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்தநிலையில் தசரதனின் உறவுக்காரரான மதன் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதனுக்கும் தசரதனின் மனைவி அஸ்வினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது தசரதனுக்கு தெரியவர இருவரையும் கண்டித்துள்ளார். இருந்தபோதிலும் அவர் கள் இருவரும் கள்ளக்காதலை விடவில்லை. இதனால் தசரதனுக்கும் அவரது மனைவி அஸ்வினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் அஸ்வினியும், மதனும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாயமானார்கள். போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இந்தநிலையில் அஸ்வினி மேல்மருவத்தூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி தனது கணவர் அடிக்கடி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், அதனால் அவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றும் கூறிவிட்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

மதன் உயிருக்கு பயந்து மறைமலைநகரில் தங்கி கார் ஓட்டிவந்ததாகவும், பொங்கலை கொண்டாடுவதற்காக உத்திரமேரூர் சென்றபோது தசரதன் தனது நண்பர்களான உத்திரமேரூர் கொல்லைமேட்டுத்தெருவை சேர்ந்த கண்ணாயிரம் (24), அதே தெருவை சேர்ந்த தேவா (30), செங்குந்த பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கன்னியப்பன் (34), நூக்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (32), ஆகியோரோடு சேர்ந்து வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாங்காடு அருகே, டிரைவர் வெட்டிக்கொலை
மாங்காடு அருகே டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
2. சிங்காரா மின்நிலைய சுரங்கப்பாதையில் இருந்து வெளியேற்றிய தண்ணீரில் வேனுடன் சிக்கிய டிரைவர்
மசினகுடி அருகே சிங்காரா மின்நிலைய சுரங்கப்பாதையில் இருந்து வெளியேற்றிய தண்ணீரில் வேனுடன் சிக்கிய டிரைவரை 4 மணி நேரத்திற்கு பிறகு போலீசார் மீட்டனர்.