கள்ளக்குறிச்சியில் குடியரசு தின விழா நடைபெறும் இடத்தை கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சியில் குடியரசு தின விழா நடைபெறும் இடத்தை கலெக்டர் கிரண்குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி,
இந்தியா முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் விழுப்புரத்தை 2- ஆக பிரித்து புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவை கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குடியரசு தின விழாவை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு பள்ளி மைதானத்தை மாவட்ட கலெக்டர் கிரண்குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது விழா மேடை அமைக்கும் இடம், தேசிய கொடி ஏற்றும் இடம், போலீஸ் அணிவகுப்பு நடைபெறும் இடம், பார்வையாளர்கள், அரசு அலுவலர்கள் அமரும் இடம் ஆகியவை அமைப்பது குறித்து அங்கிருந்த அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
தொடர்ந்து குடியரசு தின விழாவை சிறப்பாக நடத்த அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கலெக்டர் கிரண்குராலா வலியுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சமூக பாதுகாப்பு தனித்துணை ஆட்சியர் சரவணன், சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், தாசில்தார் ரகோத்தமன், பொதுப்பணித்துறை யாசர், சத்யபிரியா, மாவட் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story