பம்பாய் திருவள்ளுவர் மன்றம் சார்பில் பாண்டுப்பில் பொங்கல், திருவள்ளுவர் தினவிழா
பம்பாய் திருவள்ளுவர் மன்றம் சார்பில் பாண்டுப்பில் பொங்கல், திருவள்ளுவர் தினவிழா கொண்டாடப்பட்டது.
மும்பை,
பம்பாய் திருவள்ளுவர் மன்றம் சார்பில் பாண்டுப்பில் பொங்கல், திருவள்ளுவர் தினவிழா கொண்டாடப்பட்டது.
திருவள்ளுவர் தினவிழா
பம்பாய் திருவள்ளுவர் மன்றம் மற்றும் பிரைட் மேல்நிலைப்பள்ளி சார்பில் பொங்கல் விழா மற்றும் திருவள்ளுவர் தினவிழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 9 மணிக்கு பொங்கல் வைத்து, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையடுத்து நடந்த விழாவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மன்ற தலைவர் சிங்காரவேல், பொதுச்செயலாளர் ஜேம்ஸ் தேவதாசன், பொருளாளர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் செலின் ஜேக்கப் வரவேற்று பேசினார்.
மாணவர்களுக்கு பரிசு
தொடர்ந்து முன்னாள் மாணவர்களின் நடனம் நடந்தது. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் பூமாரி நன்றி கூறினார். விழாவை அமுதா செல்வன் தொகுத்து வழங்கினார்.
விழாவில் தலைமை ஆசிரியை ஜெஸ்டினா ஜேம்ஸ், புவனேஷ்வரி, பத்மஜா, அலிசேக் மீரான், அண்ணாமலை, ராஜா இளங்கோ, குமணராசன், ஜின்னா, தாசன், வதிலை பிரதாபன், டேவிட் நாடார், செந்தூர் நாகராஜன், பேலஸ்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story