பிறந்தநாள் விழாவையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


பிறந்தநாள் விழாவையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 17 Jan 2020 10:00 PM GMT (Updated: 17 Jan 2020 4:51 PM GMT)

பிறந்தநாள் விழாவையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் புறநகர் பஸ்நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும், ஜெயலலிதா, அண்ணா சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏ.வுமான அரணாரை ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல்தொண்டர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் பெரம்பலூர் இளம்பை தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எம்.என்.ராசாராம், ஒன்றிய செயலாளர்கள் புதுவேட்டக்குடி கிருஷ்ணசாமி, நத்தக்காடு கர்ணன், சிவபிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க.வினர் வெள்ளாழத்தெருவில் இருந்து தமிழக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.பி.கோவில்தெரு, தேரடி வீதி, மார்க்கெட் தெரு வழியாக தொண்டர்கள் ஊர்வலமாக சென்று, பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சின்னக்கடை தெரு, சத்யாநகர், ரவுத்தன்பட்டி ஆகிய இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகர், மாணவர் அணி செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் கண்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பிறந்தநாளையொட்டி திருமானூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமையில் திருமானூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட தொழில் நுட்பப்பிரிவு செயலாளர் சாமிநாதன், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் அக்பர் ஷெரீப், ஒன்றிய மாணவரணி செயலாளர் பாவேந்தன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி இணை செயலாளர் சரவணன், விழுப்பணங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர். முடிவில் அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடினர்.

அ.ம.மு.க. சார்பில் அரியலூர் மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமையில் திருமானூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் திருமானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல்முருகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் விஜயகாந்த், எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய செயலாளர் வீரமணி உள்பட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Next Story