திருமணமாகி 2 நாட்களில், முதலிரவே நடக்காத நிலையில் ரூ.5 லட்சம் கடனுக்காக மனைவியை நண்பனுக்கு விருந்தாக்க முயற்சி


திருமணமாகி 2 நாட்களில், முதலிரவே நடக்காத நிலையில் ரூ.5 லட்சம் கடனுக்காக மனைவியை நண்பனுக்கு விருந்தாக்க முயற்சி
x
தினத்தந்தி 17 Jan 2020 11:00 PM GMT (Updated: 17 Jan 2020 7:10 PM GMT)

திருமணமாகி 2 நாட்களில், முதலிரவே நடக்காத நிலையில் ரூ.5 லட்சம் கடனுக்காக தனது மனைவியை தன்னுடைய நண்பனுக்கு விருந்தாக்க முயன்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு, 

திருமணமாகி 2 நாட்களில், முதலிரவே நடக்காத நிலையில் ரூ.5 லட்சம் கடனுக்காக தனது மனைவியை தன்னுடைய நண்பனுக்கு விருந்தாக்க முயன்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

வியாபாரி

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் கணேஷ்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் முஸ்தாக்(வயது 32). வியாபாரியான இவருக்கும், 27 வயது நிரம்பிய ஒரு பெண்ணுக்கும் கடந்த ஆண்டு(2019) ஜூலை மாதம் உப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது முஸ்தாக் கேட்ட வரதட்சணையை அந்த பெண்ணின் குடும்பத்தார் கொடுத்தனர். இந்த நிலையில் திருமணமான இரண்டே நாட்களில் முதலிரவே நடக்காத நிலையில் முஸ்தாக் தனது மனைவியை அழைத்துக் கொண்டு தன்னுடைய நண்பனின் வீட்டுக்கு சென்றார்.

ரூ.5 லட்சம் கடன்

அப்போது அங்கு யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து முஸ்தாக் தனது மனைவியை, தன்னுடைய நண்பனுடன் உல்லாசமாக இருக்குமாறு கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி, முஸ்தாக்கை திட்டினார். மேலும் முஸ்தாக்கின் திட்டத்துக்கு அவர் உடன்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த முஸ்தாக், “நான் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருக்கிறேன், அதை உடனடியாக கொடுக்க வேண்டும், உன்னிடம் பணம் இருந்தால் கொடு, இல்லையேல் எனது நண்பனுடன் உல்லாசமாக இரு” என்று தனது மனைவியிடம் கூறி சரமாரியாக அடித்து, உதைத்ததாக தெரிகிறது.

தொல்லை

இதையடுத்து அவருடைய மனைவி, முஸ்தாக்கின் பிடியில் இருந்து தப்பி தனது பெற்றோரிடம் சென்றுவிட்டார். அதன்பிறகு அவர் முஸ்தாக்கிடம் வரவில்லை. இருப்பினும் முஸ்தாக், தனது மனைவியை நேரில் சந்தித்தும், செல்போனிலும் தொடர்பு கொண்டும் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மீண்டும் அவர் தனது மனைவியை தன்னுடைய நண்பனுக்கு விருந்தாக்க முயற்சித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த பெண் இதுபற்றி உப்பள்ளி மகளிர் போலீசில் புகார் செய்தார்.

கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முஸ்தாக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரூ.5 லட்சம் கடனுக்காக மனைவியை வியாபாரி ஒருவர் தனது நண்பனுக்கு விருந்தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story