மாகியை மாதிரி பிராந்தியமாக மாற்றவேண்டும் கவர்னர் கிரண்பெடி விருப்பம்


மாகியை மாதிரி பிராந்தியமாக மாற்றவேண்டும் கவர்னர் கிரண்பெடி விருப்பம்
x
தினத்தந்தி 18 Jan 2020 4:00 AM IST (Updated: 18 Jan 2020 1:02 AM IST)
t-max-icont-min-icon

மாகியை மாதிரி பிராந்தியமாக மாற்றவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி விருப்பம் தெரிவித்தார்.

புதுச்சேரி, 

மாகியை மாதிரி பிராந்தியமாக மாற்றவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி விருப்பம் தெரிவித்தார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

மாகி சென்றுள்ள கவர்னர் கிரண்பெடி அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நகராட்சி சமூகத்துக்கு தேவையான செய்திகளை மக்களுக்கு கொடுக்க வசதியாக ஒவ்வொரு மாதமும் திரைப்படங்களை இலவசமாக திரையிட கேட்டுக்கொண்டார். வருகிற 26-ந்தேதி காந்தி திரைப்படத்தை திரையிட அறிவுறுத்தினார்.

மேலும் மாகி ஆற்றுப்பகுதி நடைபாதை பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க அறிவுறுத்தினார். அடுத்தகட்டமாக வருகிற ஏப்ரல் மாதம் மீண்டும் அதை பார்வையிட வருவதாக கூறினார். மாகி பகுதி சூரிய மின்சக்தி, மற்றும் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்தும் பகுதியாக மாற்றப்படுவதை இலக்காக கொண்டு செயல்பட கேட்டுக்கொண்டார்.

மாதிரி பிராந்தியம்

கல்வி நிறுவனங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சமூக பங்களிப்பு நிதியை பயன்படுத்தவும், திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கவும் ஆலோசனை வழங்கினார். அது மட்டுமன்றி நிர்வாக அதிகாரி, நகராட்சி ஆணையர் ஆகியோர் மாணவர்களுடன் இணைந்து ஒவ்வொரு வாரமும் சிரமதான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

மாகி பிராந்தியம் வரிவசூல், கூடுதல் வருவாய், கலால் வருவாய், போக்குவரத்து, சுற்றுலாவில் சிறந்து விளங்குவதை பாராட்டினார். மானியங்கள் நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவதால் ரூ.50 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார். ஒவ்வொரு துறையின் தலைவர்களும் புதியதாக வாட்ஸ் அப் குழு உருவாக்கி சமுதாயத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள ஆலோசனை வழங்கினார். மாகியை ஒரு மாதிரி பிராந்தியமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Next Story