வேலூர் கோட்டையில் காவலன் செயலி குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு


வேலூர் கோட்டையில் காவலன் செயலி குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 18 Jan 2020 3:45 AM IST (Updated: 18 Jan 2020 1:43 AM IST)
t-max-icont-min-icon

காணும் பொங்கலையொட்டி வேலூர் கோட்டைக்கு வந்த பெண்களுக்கு காவலன் செயலி குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வேலூர்,

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வகையில் தமிழக அரசு ‘பிங்க் ஸ்குவாட்’ என்ற பிரிவை தொடங்கி உள்ளது. மேலும் பெண்கள் ஆபத்தான நேரத்தில் அவசரமாக போலீசாரை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் காவலன் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெண்கள், மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தொடங்கி வைத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு, காவலன் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்வது குறித்தும் போலீசாரை உடனடியாக தொடர்பு கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை பிங்க் ஸ்குவாட் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

காணும் பொங்கலான நேற்று வேலூர் கோட்டையை சுற்றிபார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள், பெண்கள், மாணவிகள் வந்திருந்தனர். அவர்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் அன்பரசி, சோனியா தலைமையிலான போலீசார் காவலன்செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்வது எப்படி, அதை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story