காட்பாடி ரெயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு


காட்பாடி ரெயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 18 Jan 2020 3:15 AM IST (Updated: 18 Jan 2020 1:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் மகேஷ் நேற்று காட்பாடிக்கு வருகை புரிந்தார். அங்கு 1-வது பிளாட்பாரத்தில் நவீன மயமாக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள் தங்கும் அறையையும், பயணிகள் ஓய்வறைகளையும் திறந்து வைத்தார்.

காட்பாடி,

விரிவுபடுத்தப்பட்ட குளிரூட்டப்பட்ட பயணிகள் அறையை ஆய்வு செய்தார். மேலும் தற்போது கட்டப்பட்டு வரும் ‘மல்டிலெவல்’ வாகனங்கள் நிறுத்துமிடத்தையும், கட்டப்பட்டு வரும் கட்டிடத்தையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அப்போது கோட்ட துணை மேலாளர் மனோஜ், முதுநிலை கோட்ட பொறியாளர்கள் சலாம், அருண், கோட்ட பாதுகாப்பு அதிகாரி சத்தியநாராயணன், காட்பாடி ரெயில்வே மேலாளர் ரவீந்திரநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story