போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடக்கிறது


போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 19 Jan 2020 4:30 AM IST (Updated: 18 Jan 2020 9:49 PM IST)
t-max-icont-min-icon

போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

பெரம்பலூர்,

இளம்பிள்ளை வாத நோயை, இந்தியாவில் ஒழிக்க அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 387 மையங்களில் இம்முகாம் நடைபெறுகிறது.

நோய் வராமல்...

இந்த முகாம்களில் சுகாதார பணியாளர்கள், அங்கான்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் என மொத்தம் ஆயிரத்து 548 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த முகாம் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 45 ஆயிரத்து 758 குழந்தைகள் பயன் பெறுவார்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் இன்று போலியோ சொட்டு மருந்தை வழங்கி இளம்பிள்ளை வாத நோய் வராமல் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Next Story