மாவட்ட செய்திகள்

நடைபயிற்சி சென்ற வாலிபர், வாகனம் மோதி சாவு + "||" + The young man who was walking, the vehicle collided and died

நடைபயிற்சி சென்ற வாலிபர், வாகனம் மோதி சாவு

நடைபயிற்சி சென்ற வாலிபர், வாகனம் மோதி சாவு
நடைபயிற்சி சென்ற வாலிபர், வாகனம் மோதி சாவு.
தா.பேட்டை,

தா.பேட்டை நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 29). இவர் தா.பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை நடைபயிற்சிக்காக தா.பேட்டை - துறையூர் செல்லும் மெயின்ரோட்டில் நடந்து சென்றார். ஆராய்ச்சி சமத்துவபுரம் அருகே அவர் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் உயிருக்கு போராடினார். அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு துறையூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சதீஷ்குமார், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரின் உடலை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவிலில் பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் சாவு: படுகாயம் அடைந்த கணவரும் பலியான பரிதாபம்
நாகர்கோவிலில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலியான சம்பவத்தில் படுகாயம் அடைந்த கணவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
2. விபத்தில் பலியான மாணவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க கோரி கல்லூரியை மாணவர்கள் முற்றுகை
விபத்தில் பலியான மாணவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கக்கோரி கல்லூரியை முற்றுகையிட்டு மாணவர்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த தாய்மாமாவும் சிக்கினார்.
4. அரசு அதிகாரியின் வாகன கண்ணாடியை உடைத்து பெண் போலீசை தாக்கிய வாலிபர் கைது
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு அதிகாரியின் வாகன கண்ணாடியை உடைத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசை தாக்கிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.
5. கோவையில் கேரள லாட்டரி சீட்டுகள் கத்தை, கத்தையாக பறிமுதல் வாலிபர் கைது
கோவையில் வாலிபரிடம் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் கத்தை, கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டன.

ஆசிரியரின் தேர்வுகள்...