மாவட்ட செய்திகள்

வருகிற 5-ந் தேதி தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்: கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி தீவிரம் + "||" + Tanjay on the 5th coming Large shrine temple: The intensity of the gold plating work for the vessels

வருகிற 5-ந் தேதி தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்: கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி தீவிரம்

வருகிற 5-ந் தேதி தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்: கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி தீவிரம்
வருகிற 5-ந் தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி கலசங்களுக்கு தங்கமுலாம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தஞ்சாவூர்,

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.


ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம்(பிப்ரவரி) 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான திருப்பணிகள் தொல்லியல் துறை மற்றும் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 2-ந் தேதி பாலாலயம் நடந்தது.

யாக குண்டங்கள்

கும்பாபிஷேக யாகசாலை பூஜைக்காக கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் கொட்டகை அமைக்கப்பட்டு 110 யாக குண்டங்கள், 22 வேதிகைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளின் கோபுரங்கள் மற்றும் விமான கோபுரத்தில் இருந்த கலசங்கள் கீழே இறக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு தங்க முலாம் பூசும் பணி நடந்து வருகிறது.

தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களை பாலீசாக மாற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொடிக்கம்பத்தை சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த செம்பு தகடுகள் அகற்றப்பட்டு, அதை சுத்தப்படுத்தும் பணியும் நடக்கிறது.

தற்காலிக கழிவறைகள்

கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் 100 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்படுகிறது. பெரியகோவில் வளாகத்தில் 20 இடங்களிலும், கோவிலை சுற்றியுள்ள வீதிகள் மற்றும் கார் நிறுத்தும் இடம், தற்காலிக பஸ் நிறுத்தும் இடம் ஆகிய இடங்களிலும் குடிநீர் வசதி செய்யப்படுகிறது. மக்கள் கூட்டம் அதிகமான பகுதிகள், நடந்து செல்லும் சாலையின் ஓரம் என 200 இடங்களில் தற்காலிக கழிவறைகள் வைக்கப்பட உள்ளன. மேலும் நகரில் பல இடங்களில் மின் அலங்காரம் செய்யப்பட இருக்கிறது.

குடிநீர், கழிவறை வசதி, மின் அலங்காரம் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தஞ்சை பெரியகோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கும்பாபிஷேக விழாக்குழு தலைவர் துரை.திருஞானம் தலைமை தாங்கினார்.

இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், கும்பாபிஷேக விழாக்குழு உறுப்பினர்கள் அறிவுடைநம்பி, பி.எஸ்.சேகர், கோவில் நிர்வாக அலுவலர் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குடமுழுக்கு முடிந்த 2-வது நாள் தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம்
குடமுழுக்கு முடிந்த 2-வது நாளான நேற்று தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
2. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை
தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
3. தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் சிவனடியார்கள் கோரிக்கை
தஞ்சை பெரியகோவிலில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என சிவனடியார்கள் கோரிக்கை வைத்தனர்.
4. தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்: புதிய சாலை அமைக்கும் பணி
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
5. தஞ்சை பெரியகோவிலில் பிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிஷேகம்: 50 மீட்டர் இடைவெளியில் பாதுகாப்புக்காக தடுப்புகட்டைகள் அமைக்கப்படுகிறது
தஞ்சை பெரியகோவிலில் பிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக பெரியகோவில் வளாகத்தில் 50 மீட்டர் நீள இடைவெளியில் தடுப்புகட்டைகள் பாதுகாப்புக்காக அமைக்கப்படுகின்றன. இதற்காக போலீசார் அளந்து குறியீடு செய்யும்பணியில் நேற்று ஈடுபட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை