திருவாரூரில் கனமழை: தியாகராஜர் கோவிலுக்குள் தண்ணீர் குளம்போல் தேங்கியது


திருவாரூரில் கனமழை: தியாகராஜர் கோவிலுக்குள் தண்ணீர் குளம்போல் தேங்கியது
x
தினத்தந்தி 19 Jan 2020 4:30 AM IST (Updated: 19 Jan 2020 12:43 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் பெய்த கனமழையின் காரணமாக தியாகராஜர் கோவிலுக்குள்் தண்ணீர் புகுந்து குளம் போல் தேங்கியது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில்் நேற்று முன்தினம் இரவு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்று பகல் முழுவதும் கனமழையாக கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் நடந்து செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர். வாகன ஓட்டுனர்களும் குளம்போல் நின்ற தண்ணீரை கடந்து செல்ல சிரமப்பட்டனர். நகரின் கடைவீதி பகுதியில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கோவிலுக்குள் தண்ணீர் தேங்கியது

இந்த கனமழையினால் திருவாரூர் தியாகராஜர் கோவில் 2-வது பிரகாரத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மேற்கு கோபுர வாசல் வழியிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைந்த னர்.

திருவாரூர் கடை வீதியில் நடைபாதை கடைகள் முற்றிலும் முடங்கியது. பொங்கல் விடுமுறை முடிந்து அனை வரும் பணிக்கு திரும்பிய நிலையில் கன மழையினால் அனைத்து பணிகளும் சற்று பாதிக்கப்பட்டது. தொடர் கனமழையினால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை தடைபட்டது.


Next Story