போலீஸ்காரரை தாக்கிய 4 வாலிபர்கள் கைது


போலீஸ்காரரை தாக்கிய 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 19 Jan 2020 4:15 AM IST (Updated: 19 Jan 2020 1:05 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை, 

மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் சிவகுமார். இவர் சம்மட்டிபுரம் மெயின் ரோடு பகுதியில் ரோந்து சென்றார். அப்போது 4 வாலிபர்கள் நடுரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக செல்பவர்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்த போலீஸ்காரர் சிவகுமார் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தார். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுப்பு தெரிவித்ததோடு போலீஸ்காரரிடம் தகராறு செய்தனர். மேலும் அவர்கள் சிவகுமாரை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி விட்டு சரமாரியாக தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து அவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் சம்மட்டிபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது 22), கார்த்திக்(23), ரஞ்சித்(20), சொக்கலிங்கநகரை சேர்ந்த ஜோதி(21) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

Next Story