சோழவந்தான் அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை


சோழவந்தான் அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை
x
தினத்தந்தி 19 Jan 2020 4:00 AM IST (Updated: 19 Jan 2020 1:11 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் அருகே புதுமாப்பிள்ளை விஷம் குடித்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே உள்ள அய்யப்பநாயக்கபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது30) மெக்கானிக்காக இருந்தார்.

இவருக்கு 6 மாதத்துக்கு முன்பாக சமயநல்லூர் சத்தியமூர்த்திநகரை சேர்ந்த ஆனந்தி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. நேற்று முன்தினம் ஆனந்தியை சத்தியமூர்த்தி நகரில் உள்ள பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை கணவன்-மனைவி இடையே போனில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சத்தியமூர்த்தி விஷம் குடித்து விட்டு வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காடுபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் விசாரணை செய்து வருகிறார். புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story