தஞ்சை மாவட்டத்தில், இன்று 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு
தஞ்சை மாவட்டத்தில், இன்று 2¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்படுள்ளது என கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.
தஞ்சாவூர்,
இந்தியாவில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 1995-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தமிழகஅரசின் தீவிர முயற்சி காரணமாக 2004-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் போலியோவினால் எந்த குழந்தைக்கும் பாதிப்பு இல்லை. இந்த ஆண்டிற்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று(ஞாயிற்றுக் கிழமை) இந்தியா முழுவதும் நடக்கிறது.
ஒரே நாளில் நாட்டில் உள்ள அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்தில் இருந்து அகற்றப்பட்டு அழிக்கப்படுகின்றது. இந்த முகாம் மூலம் தஞ்சை மாவட்டத்தில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 33 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப் படுள்ளது. இதற்காக நகரப்பகுதிகளில் 128 மையங்களும், ஊரக பகுதிகளில் 1,382 மையங்களும் என மொத்தம் 1510 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணியில் 6,040 பணியாளர்களும், 178 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
நடமாடும் குழுக்கள்
ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
51 நடமாடும் குழுக்கள் மூலமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இதற்கு முன் எத்தனை முறை சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்திருந்தாலும் இந்த முகாமில் கூடுதல் தவணையாக கட்டாயம் சொட்டு மருந்து எடுத்து கொள்ள வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆணையர்
தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட கரந்தை, மானம்புச்சாவடி, கல்லுக்குளம், சீனிவாசபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சுற்றுலா பயணிகளின் வசதியை கருதி புதிய, பழைய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், பெரியகோவில் பகுதிகளிலும் இன்று சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மேலும் 21 பள்ளிகள், 15 சத்துணவு மையங்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் என 70 இடங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
மாநகராட்சி பகுதியில் 25 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு மேல் இரவு 11 மணி வரை புதிய, பழைய பஸ் நிலையம், பெரியகோவில், ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story