நெல்லையில் பொங்கல் விழாவில் மோதல்; 15 பேர் மீது வழக்கு


நெல்லையில் பொங்கல் விழாவில் மோதல்; 15 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 Jan 2020 10:15 PM GMT (Updated: 18 Jan 2020 8:33 PM GMT)

நெல்லையில் பொங்கல் விழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நெல்லை, 

நெல்லை தச்சநல்லூர் மேலக்கரையில் கடந்த 15-ந்தேதி பொங்கல் விழா நடந்தது.

அப்போது அங்கு வந்த சிலர், எங்கள் தலைவரை ஏன் அழைக்கவில்லை என்று ஊர் நாட்டாண்மை தவிடனிடம் முறையிட்டனர்.

அப்போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து ஊர் நாட்டாண்மை தவிடன் தலைமையில் அந்த பகுதி பொதுமக்கள் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு கொடுத்தனர்.

இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் விசாரணை நடத்தி மேலக்கரையை சேர்ந்த உதயகுமார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.

இந்த நிலையில் சிலர் தன்னை தாக்கியதாக உதயகுமார் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனு மீது போலீசார் விசாரணை நடத்தி ஊர் நாட்டாண்மை தவிடன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பொங்கல் விழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Next Story