நாகர்கோவிலில் ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவிலில் உள்ள ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாகர்கோவில்,
கம்யூனிச இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரும், பொதுவுடைமை வீரருமான ஜீவானந்தத்தின் (ஜீவா) நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நாகர்கோவிலில் உள்ள மணிமண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், ஜீவா சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
எம்.பி.
நிகழ்ச்சியில் எச்.வசந்த குமார் எம்.பி., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜாண்தங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், சந்திரன், நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், யூனியன் தலைவர்கள் சாந்தினி (தோவாளை), அய்யப்பன் (ராஜாக்கமங்கலம்),
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், ஜீவானந்தத்தின் பேரன் ஜீவா கணேசன் மற்றும் அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
நாகர்கோவிலில் மாநகராட்சி பூங்கா அருகில் உள்ள ஜீவா மணிமண்டபத்தில் அவருடைய சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் வக்கீல் மகேஷ், நிர்வாகிகள் சேக்தாவூது, எம்.ஜே.ராஜன், சார்லஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது, ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன், மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி, நிர்வாகிகள் மோகன், பழனிசாமி, பெஞ்சமின், அசீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பூதப்பாண்டியில் உள்ள ஜீவா சிலைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் பாசி, ஒன்றியக்குழு உறுப்பினர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் மிக்கேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story