கடலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சைக்கிள் பேரணி


கடலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சைக்கிள் பேரணி
x
தினத்தந்தி 19 Jan 2020 4:15 AM IST (Updated: 19 Jan 2020 2:52 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் ஆரோக்கிய இந்தியா மிதிவண்டி தினத்தையொட்டி சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பண்ருட்டி,

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஆரோக்கிய இந்தியா மிதிவண்டி தினம் கொண்டாடப்பட்டது.

குமராட்சி ஊராட்சியில் ஆரோக்கிய இந்தியா மிதிவண்டி தினத்தையொட்டி சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.ஜி. தமிழ்வாணன் தலைமை தாங்கினார். ஊராட்சிமன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முடிவில் ஊராட்சி செயலாளர் பாக்யராஜ் நன்றி கூறினார்

குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ம.கொளக்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஆரோக்கிய இந்தியா மிதிவண்டி தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சைக்கிள் பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பாபு ராஜன் முன்னிலை வகித்தார். ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ஆரிப்தீன் மற்றும் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் இளமுருகு நன்றி கூறினார்.

நாட்டார்மங்கலம்

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நாட்டார் மங்கலம் ஊராட்சியில் ஆரோக்கிய இந்தியா மிதிவண்டி தினத்தை முன்னிட்டு உடல் ஆரோக்கியத்திற்காக மிதிவண்டி பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் சுதா மணிரத்தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகுமார், ராமச்சந்திரன், பொறியாளர் ஜெயச்சந்திரன், ஊராட்சி செயலாளர் பாலமுருகன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி ஒன்றியம், சொரத்தூர் கிராமத்தில் ஆரோக்கிய இந்தியா மிதிவண்டி தினம் கொண்டாடப் பட்டது. இதையொட்டி அங்கு பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் சபா. பாலமுருகன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், என்ஜினீயர் ருக்மணி, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி அனைத்து தெருக்கள் வழியாக சென்று கிழக்கு தெருவில் முடிவடைந்தது. இதில் ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள் கோவிந்தன், தமிழ்ச்செல்வி சுரேஷ்குமார், வனிதா தனசேகர், சுபா முருகவேல், கலைச்செல்வி சதீஷ், ரகு, சாமிநாதன், செல்வி பழனிவேல், துணை தலைவர் தமிழ்ச்செல்வி ஆறுமுகம் மற்றும் ஊராட்சி செயலாளர் தனசேகர் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

வேப்பூர்

வேப்பூர் ஊராட்சியில் மிதிவண்டி தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி திருஞானம் தலைமை தாங்கினார். ஊராட்சிமன்ற துணை தலைவர் மஞ்சுளா செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராசு கலந்து கொண்டு சைக்கிள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் வேப்பூர் கிராம இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story