பெல்காவ் நில பிரச்சினை அல்ல மராட்டிய கலாசாரத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் சஞ்சய் ராவத் எம்.பி. பேச்சு


பெல்காவ் நில பிரச்சினை அல்ல மராட்டிய கலாசாரத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் சஞ்சய் ராவத் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 19 Jan 2020 4:30 AM IST (Updated: 19 Jan 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

பெல்காவ் நில பிரச்சினை அல்ல. மராட்டிய கலாசாரத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.

மும்பை,

பெல்காவ் நில பிரச்சினை அல்ல. மராட்டிய கலாசாரத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.

பெல்காவ் பிரச்சினை

மராட்டியம் - கர்நாடக எல்லையில் உள்ள பெல்காவ் மாவட்டம் தொடர்பாக பிரச்சினை இருந்து வரும் நிலையில் நேற்றுமுன்தினம், அந்த மாவட்டத்தை மராட்டியத்துடன் இணைக்க போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த சென்ற மந்திரி ராஜேந்திர பாட்டீலை கர்நாடக போலீசார் தடுத்து நிறுத்தியது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று பெல்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெல்காவ் மாவட்டம் தொடர்பாக பிரச்சினை மராட்டியம் - கர்நாடக மாநிலங்களுக்கான ஒரு சில பிரச்சினை அல்ல. மராட்டிய கலாசாரத்தையும், மராத்தி மொழியையும் பாதுகாப்பதற்கான போராட்டம்.

கலாசாரத்தை பாதுகாப்போம்

இது பாண்டவர், கவுரவர் களுக்கு இடையிலான சண்டை அல்ல. இந்த பிரச்சினையில் இருபுறமும் பாண்டவர்கள் உள்ளனர். இந்த பிரச்சினை முந்தைய அரசாங்கங்களால் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். பெல்காவ் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தீர்ப்பு அனைவரும் ஏற்றுக் கொள்வதாக இருக்கும்.

அதுவரை சண்டையிடுவதற்குப் பதிலாக மராத்தி கலாசாரத்தையும், மொழியையும் பாதுகாக்கப் பணியாற்றுவோம். மொழியியல் அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டு இருந்தாலும், வெவ்வேறு மொழிகளை பேசுபவர்கள் இடையே விரோதப் போக்கு இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story