திருமானூர் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் பலி; 36 பேர் காயம்
கோக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பலியானார். 36 பேர் காயம் அடைந்தனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கோக்குடி கிராமத்தில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு நேற்று புனித இஞ்ஞாசியார் ஆலய திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அரசு அனுமதியுடன் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் மற்றும் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
வாடிவாசலில் இருந்து காலை 7.45 மணி அளவில் ஆலயத்தின் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டு காளைகளை அடக்கத் தொடங்கினர். இதில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டது. சில காளைகள் வீரர்களை அருகில் கூட நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தன.
5 நிமிடங்களுக்கும் மேலாக
இதில் கீழப்பழுவூரில் உள்ள சுவாமி கல்வி நிறுவனத்தின் தாளாளர் கோவிந்தசாமியின் காளை அவிழ்த்து விடப்படுகிறது என ஒலி பெருக்கியில் அறிவித்த அடுத்த நொடியே வாடி வாசலில் நின்றிருந்த அனைத்து மாடுபிடி வீரர்களும் தடுப்புச்சுவர் மேல் ஏறி நின்று கொண்டதால் பார்வையாளர்கள் திகைப்பில் ஆழ்ந்தனர். அதனை தொடர்ந்து அவிழ்த்துவிடப்பட்ட அந்த காளை 5 நிமிடங்களுக்கும் மேலாக அவ்விடத்தில் சீறிப்பாய்ந்து ஒரு வீரரை கூட அருகில் நெருங்க விடாமல் செய்தது. அந்த காளைக்கு பல பரிசுகள் அறிவிக்கப்பட்டும் ஒரு வீரர் கூட மாட்டின் பக்கத்தில் நெருங்க முடியாததால் அங்கு கூடி இருந்த பார்வையாளர்கள் அனைவருமே ஆரவாரத்தில் கூச்சலிட்டும், கைதட்டியும், விசில் அடித்தும் மகிழ்ச்சியாக அக்காட்சியை கண்டுகளித்தனர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா, மின்விசிறி மற்றும் ரொக்கம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. சில மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் மாட்டை பிடித்தால் தங்கம், வெள்ளி, சேவல், மற்றும் ரொக்கம் ஆகியவற்றையும் பரிசாக வழங்குவதாகவும் அறிவித்திருந்தனர். அதன்படி அறிவிக்கப்பட்ட மாடுகளை பிடித்தவர்களுக்கு விழாக்குழுவினரிடம் இருந்து கொடுக்கப்பட்ட பரிசு மட்டுமின்றி மாட்டின் உரிமையாளர் அறிவித்த பரிசும் வழங்கப்பட்டது.
37 பேர் காயம்
இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதி உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே களத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் மொத்தம் 643 காளைகளும், 286 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 16 பேரும், மாடுபிடி வீரர்கள் 20 பேரும், மாட்டின் உரிமையாளர் ஒருவரும் என மொத்தம் 37 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் திருச்சியை சேர்ந்த பால்ராஜ் மகன் சதீஷ்குமார்(வயது 26), குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் தினேஷ்குமார்(21), லால்குடி ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் நந்தகுமார்(19), கீழகொளத்தூர் கிராமத்தை சேர்ந்த பஞ்சநாதன் மகன் விக்கி(21), கோக்குடி கிராமத்தை சேர்ந்த மாட்டின் உரிமையாளர் வேளாங் கண்ணி(60), பூண்டி கிராமத்தை சேர்ந்த முத்தையன் மகன் ராஜ்குமார்(20), திம்மூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் கருப்பையா(26), மேலப்பழுவூர் கிராமத்தை சேர்ந்த பரமசிவம்(60) ஆகிய 8 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒருவர் பலி
மேலும் லால்குடியை சேர்ந்த மகபூப்பாஷா மகன் ஒஜிரான்(25) என்பவரை மாடு முட்டியதில் வயிற்றின் மேல் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவருக்கு அருகில் இருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றபோது, பரிதாபமாக உயிரிழந்தார். இவர் அவரது பகுதியிலிருந்து வந்த காளையின் உரிமையாளர் கூட வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை எல்லைக்கோட்டை தாண்டிய பின் மாட்டிற்கு கயிறு போட்டு இழுத்து செல்வதற்காக அந்த மாட்டின் உரிமையாளர் முயற்சி செய்துள்ளார். அப்போது சீறிப்பாய்ந்த காளை உரிமையாளர் அருகில் இருந்த ஒஜிரான் மீது பாய்ந்து முட்டியது.
இந்த ஜல்லிக்கட்டில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருமேனி, மோகன்தாஸ் மற்றும் கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி ஆகியோரின் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் கோட்டாட்சியர் பாலாஜி, தாசில்தார் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர்.

Related Tags :
Next Story