ஜோலார்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் - அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்


ஜோலார்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் - அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Jan 2020 4:00 AM IST (Updated: 19 Jan 2020 10:29 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை திருப்பத்தூர் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் ம.ப.சிவன்அருள் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பி.சுமதி வரவேற்றார். குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் அவசியம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட துணை சுகாதார இயக்குனர் கே.எஸ்.டி.சுரே‌‌ஷ் விளக்க உரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 888 குழந்தைகளுக்கு, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள் என மொத்தம் 697 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 89 மேற்பார்வையாளர் குழுக்களும், சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் என 2974 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை ஒன்றியம் முழுவதும் 262 மையங்கள் மற்றும் ஏலகிரிமலையில் 9 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட 18 ஆயிரத்து 762 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமே‌‌ஷ், ஜோலார்பேட்டை நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சீனிவாசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ரமே‌‌ஷ், திருப்பத்தூர் நகர செயலாளர் டி.டி.குமார் மற்றும் டாக்டர்கள் மீனாட்சி, சுமன், பிரசாத், காவியா மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story