திருவண்ணாமலை மாவட்டத்தில் 2¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தகவல்


திருவண்ணாமலை மாவட்டத்தில் 2¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 19 Jan 2020 10:45 PM GMT (Updated: 19 Jan 2020 4:59 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது என்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.

ஆரணி, 

திருவண்ணாமலை மாவட்ட பொது சுகாதாரம், ஆரணி நகராட்சி ஆகியவை இணைந்து போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர் சிலை முன்பு நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் பாண்டியன், துணை இயக்குனர் மீரா, தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் இல.மைதிலி, ஆரணி ரோட்டரி சங்க தலைவர் அமர்‌‌ஷரீப், கோட்டை ரோட்டரி சங்க தலைவர் பி.பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி நகராட்சி ஆணையாளர் கு.அசோக்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நமது மாவட்டத்தில் 7 ஆயிரத்து 579 பணியாளர்கள், தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் உதவியுடன் 1,928 முகாம் மூலமாக 2 லட்சத்து 27 ஆயிரத்து 263 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று முதல் வீடு, வீடாக களப்பணியாளர்களை கொண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் நந்தினி, எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா, மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சிவஞானம், மாவட்ட கவுன்சிலர் அ.கோவிந்தராசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், அரசு வக்கீல் கே.சங்கர், தாசில்தார் தியாகராஜன், அரசு அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இரும்பேடு

இரும்பேடு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வி.தரணிவெங்கட்ராமன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். பையூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சரவணன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். சேவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஏ.கே.குமரவேலு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

Next Story