மாவட்டத்தில் 1,276 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்


மாவட்டத்தில் 1,276 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Jan 2020 11:00 PM GMT (Updated: 19 Jan 2020 6:59 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் 1,276 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. கோவிந்தம்பாளையத்தில் அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் 1,276 முகாம்களில் 5 வயதிற்கு உட்பட்ட 1 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டது. அதற்காக கிராமப்புறங்களில் 1,108 முகாம்களும், நகராட்சி பகுதிகளில் 168 முகாம்களும் அமைக்கப்பட்டன. அதன்படி நேற்று அந்த முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 5 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

அதேபோல் 52 சிறப்பு முகாம்கள், 27 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் பிற துறையை சேர்ந்த 126 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு அரசுத்துறையினர், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

இதற்கிடையே பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையத்தில் உள்ள நடு நிலைப்பள்ளியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். தமிழக மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

அப்போது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை கொடுத்து போலியோ இல்லாத மாநிலத்தை உருவாக்க பொதுமக்கள் அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் கூறினார். இதில் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம், உதவி இயக்குனர் நக்கீரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செந்தில், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி, சமயசங்கிலி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், உளள்£ட்சி பிரதிநிதிகள், பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story