மாவட்ட செய்திகள்

மன்னார்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார் + "||" + Inaugurating the Polio Drip Camp Minister Kamaraj in Mannargudi

மன்னார்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்

மன்னார்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்
மன்னார்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
மன்னார்குடி,

போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்க நிகழ்ச்சி மன்னார்குடி பஸ் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட புள்ளியியல் துணை இயக்குனர் பாஸ்கரன், முன்னாள் நகரசபை தலைவர்கள் சிவா.ராஜமாணிக்கம், சுதா அன்புசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முதலிடம்

சுகாதாரத்தில் தமிழகம் முதலிடம் வகிப்பது பெருமைக்குரியது. இந்திய அளவில் போலியோ 9 ஆண்டுகளாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளாக போலியோ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.திருவாரூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 801 முகாம்கள், நகர் பகுதிகளில் 72 முகாம்கள் என மொத்தம் 873 முகாம்கள் அமைக்கப்பட்டு 5 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 20 ஆயிரத்து 105 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்.வாசுகிராமன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தமிழ்ச்செல்வம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் குமார், ரோட்டரி சங்க நிர்வாகிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...