மாவட்ட செய்திகள்

விழுப்புரத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார் + "||" + MK Stalin unveils bronze statue of Karunanidhi at Villupuram

விழுப்புரத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

விழுப்புரத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
விழுப்புரம்,

விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, கருணாநிதியின் சிலையை திறந்து வைக்க உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் இன்று மாலை மு.க.ஸ்டாலின் விழுப்புரத்துக்கு வருகை தர உள்ளார். மாலை 3 மணிக்கு பேரங்கியூர் வரும் அவருக்கு தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க இருக்கின்றனர்.


இதைத்தொடர்ந்து 4 மணிக்கு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்துக்கு வரும் மு.க.ஸ்டாலின், அங்கு கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைக்க உள்ளார்.

பொதுக்கூட்டம்

பின்னர் 5 மணிக்கு புதிய பஸ்நிலையம் அருகே நகராட்சி திடலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதற்கு மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுரையாற்ற உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர். முன்னதாக நகரில் பல்வேறு இடங்களில் மு.க.ஸ்டாலினை வரவேற்று தி.மு.க.வினர் சுவர் விளம்பரங்களை எழுதியுள்ளனர்.