55 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்


55 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி முதல்-மந்திரி  உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Jan 2020 5:55 AM IST (Updated: 20 Jan 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் நடந்த பிரமாண்ட மாரத்தான் போட்டியில் 55 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

மும்பை, 

மும்பையில் நடந்த பிரமாண்ட மாரத்தான் போட்டியில் 55 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்

பொதுமக்கள் இடையே உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ‘மும்பை மாரத்தான் போட்டி' நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மும்பை மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.

திரளான பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட ‘டிரீம் ரன்' மாரத்தான் போட்டியை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே துப்பாக்கியால் சுட்டு தொடங்கி வைத்தார்.

போட்டியில் பலர் குழுக்களாகவும் கலந்து கொண்டனர். அவர்கள் சுற்றுச்சூழலை காப்போம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களுடன் கலந்து கொண்டனர். தடகள, விளையாட்டு வீரர்கள் அதிகளவில் கலந்து கொண்டு ஓடினர்.

21 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அரை மாரத்தான் போட்டியை மாநில சுற்றுச் சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே தொடங்கி வைத்தாா்.

55 ஆயிரம் பேர் பங்கேற்பு

இந்தியர்களுக்கான 42 கிலோ மீட்டர் தூரம் கொண்ட முழு மாரத்தான் போட்டியில் ஆண்கள் பிரிவில் சிருனு புகதா முதலிடம் பிடித்தார். ஷெர்சிங் 2-வது இடமும், துர்க்கா பகதூர் புதா 3-வது இடமும் பிடித்தனர்.

பெண்கள் பிரிவில் சுதா சிங் முதல் இடமும், ஜோதி காவதே 2-ம் இடமும், ஷியாம்லி சிங் 3-வது இடமும் பிடித்தனர்.

சர்வதேச அளவிலான முழு மாரத்தான் போட்டியில் ஆண்கள் பிரிவில் தேராரா குரிசா முதல் இடமும், ஆயிலே அப்சரே 2-வது இடமும், பிரகனு தேஷோம் 3-வது இடமும் பிடித்தனர்.

நேற்று நடந்த மும்பை மாரத்தான் போட்டியில் நடிகர் ராகுல் போசே, பாடல் ஆசிரியர் குல்சார், தொழில் அதிபர் அனில் அம்பானி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் உள்பட 55 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

Next Story