ஊரப்பாக்கம் அருகே, காண்டிராக்டர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை
ஊரப்பாக்கம் அருகே காண்டிராக்டர் வீட்டில் 35 பவுன் நகை, ரூ.13 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள ஆதனூர் எம்.ஜி. நகர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர் (வயது 32), பில்டிங் காண்டிராக்டர். இவர் கடந்த 15-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சென்று இருந்தார். நேற்று முன்தினம் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் தங்க நகைகள், ரூ.13 லட்சம் போன்றவை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சவுந்தர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் சென்று விசாரித்தார். திருட்டு போன வீட்டில் பதிவான கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர். மேலும் திருட்டு போன வீட்டுக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story