மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பிறகு பா.ஜனதாவில் அதிருப்தி வெடிக்கும் சித்தராமையா பேட்டி
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பிறகு பா.ஜனதாவில் அதிருப்தி வெடிக்கும் என்று சித்தராமையா கூறினார்.
மைசூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மைசூருவில் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அதிருப்தி வெடிக்கும்
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் மந்திரி பதவி கிடைக்காது. தோல்வி அடைந்த எச்.விஸ்வநாத், மந்திரி பதவி வழங்காவிட்டால் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள் என்று கூறியுள்ளார். கர்நாடகத்தில் அரசே இல்லாத நிலை உள்ளது. கூட்டணி ஆட்சிக்கு பிறகு எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு அமைந்து 6 மாதங்கள் ஆகிறது.
முதல்-மந்திரி எடியூரப்பா ெபாய் கூறி கொண்டு சுற்றி திரிகிறார். மந்திரிசபை முழுமையாக அமைக்கப்படவில்லை. அதனால் இந்த அரசு செயல்பட தொடங்கிவிட்டது என்று சொல்ல முடியாது. மந்திரிசபை விரிவாக்கம் செய்த பிறகு பா.ஜனதா அரசில் அதிருப்தி வெடிக்கும்.
டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த கவர்னருக்கு அதிகாரம் இல்லை. கவர்னர் என்பவர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர். நாட்டில் 13 மாநிலங்கள் அந்த சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன. பா.ஜனதா கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு தைரியம் இருந்தால், தனது கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலத்தில் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் அல்லது ஆதரவை வாபஸ் பெற வேண்டும். இது பா.ஜனதாவால் முடியுமா?.
கர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமனம் செய்யும் பணியை எங்கள் கட்சி மேலிடம் முடிவு செய்யும். கட்சி தலைவராக யாரை நியமிக்க வேண்டும் என்று கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளேன்.
இதுகுறித்து வெளிப்படையாக கூற முடியாது. புதிய தலைவரை விரைவாக நியமனம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story