மங்களூருவில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரம்: எனக்கு சில போலீசார் மீது சந்தேகம் குமாரசாமி பேட்டி
மங்களூருவில் வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரத்தில் எனக்கு சில போலீசார் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக குமாரசாமி கூறினார்.
சிக்கமகளூரு,
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தாமதிக்கக்கூடாது
மங்களூருவில் வெடிகுண்டு வைத்தது யார் என்பதை கண்டுபிடிப்பது கடினமான பணி அல்ல. அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா இருக்கும். அதனால் வெடிகுண்டு வைத்த விஷமிகளை கண்டுபிடிப்பதில் போலீசார் எக்காரணம் கொண்டும் தாமதிக்கக்கூடாது.
ேபாலீசார் நேர்மையாக செயல்பட்டு வெடிகுண்டு வைத்தவர்களை கைது செய்ய வேண்டும். தவறு செய்தவர்களை கைது செய்ய போலீசார் 15 நாட்கள் எடுத்துக்கொண்டு வேறு கதையை உருவாக்கக்கூடாது. உண்மை விவரங்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
போலீசார் மீது சந்தேகம்
எனக்கு சில போலீசார் மீது சந்தேகம் உள்ளது. அரசு மற்றும் போலீசார் சேர்ந்து கொண்டு இந்த சமுதாயத்தை உடைக்க முயற்சி செய்யக்கூடாது. சமுதாயத்தில் அவநம்பிக்கை மக்களிடையே ஏற்படக்கூடாது. நாட்டில் தீமூட்டும் வேலையை சிலர் செய்கிறார்கள். நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன.
ஆட்சி அதிகாரம் பா.ஜனதாவிடமே உள்ளது. இதுகுறித்த விசாரணையை எந்த அமைப்பு மூலம் வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால் மக்களின் நம்பிக்கையை இழக்க செய்ய வேண்டாம். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் போலீசார் கருத்து தெரிவிக்கக்கூடாது. அரசே மக்களிடையே மோதல் மனப்பான்மையை வளர்த்துவிடுகிறது. இதற்காக சில போலீஸ் அதிகாரிகளை அரசு பயன்படுத்தி கொள்கிறது. இத்தகைய சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story