புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2020 4:15 AM IST (Updated: 21 Jan 2020 2:11 AM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்காட்டுப்பள்ளி,

திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், இந்த கடையை மூடக்கோரியும் பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் மகாத்மா காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் காந்தி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வக்கீல் ஜீவக்குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி கலைச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவசாமி, சம்சுதீன், முருகேசன், ஸ்ரீதர் செபஸ்தியார் மற்றும் பலர் கலந்து கொண்டு மதுக்கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இது முதல் கட்ட போராட்டம் தான் என்றும் மதுக்கடையை உடனடியாக மூடாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஒன்றிய செயலாளர் காந்தி கூறினார்.

Next Story