புனேயில் 24 மணி நேரமும் கடைகளை திறப்பதைவிட முக்கியமான வேலைகள் நமக்கு உள்ளது அஜித்பவார் சொல்கிறார்


புனேயில் 24 மணி நேரமும் கடைகளை திறப்பதைவிட    முக்கியமான வேலைகள் நமக்கு உள்ளது   அஜித்பவார் சொல்கிறார்
x
தினத்தந்தி 21 Jan 2020 4:00 AM IST (Updated: 21 Jan 2020 3:03 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கும் திட்டத்தைவிட முக்கியமான வேலைகள் நமக்கு உள்ளது என துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.

மும்பை,

மும்பையில் குடியிருப்புகள் இல்லாத இடங்களில் 24 மணி நேரமும் கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் திறந்து வைக்கும் திட்டம் வருகிற 26-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே வெளியிட்டார்.

இந்த திட்டத்தை புனேயிலும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாநில துணை முதல்-மந்திரி அஜித்பவாரிடம் கேட்டதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

முக்கியமான வேலைகள் உள்ளன

புனேயிலும் 24 மணி நேரமும் கடைகள் திறக்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற செய்திகளை பார்த்தேன். தூங்கா நகரமான மும்பையின் வாழ்க்கை வேறு விதமானது. நாம் புனேவாசிகள். அந்த திட்டம் தொடர்பாக நம்மிடம் வேறுபட்ட யோசனைகள் இருக்கலாம்.

24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கும் திட்டங்களை விட முக்கியமான வேலைகள் நமக்கு உள்ளது. மேலும் அந்த திட்டம் மும்பையில் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை பார்த்த பின்னர் தான் புனேயில் முயற்சி செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story