ஈரோட்டில் வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரோடு,
வங்கி ஊழியர்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், ஸ்டேட் வங்கி ஈரோடு கிளை வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தலைமை தாங்கினார்.
வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். ஊதிய உயர்வு மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து ெகாண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்கியகுமார், இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் தயாள் பிரசாத், முத்துகிருஷ்ணன் மற்றும் வங்கி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Related Tags :
Next Story