திம்பம் மலைப்பாதையில் காரை மறித்து கண்ணாடியை உடைத்த யானை


திம்பம் மலைப்பாதையில் காரை மறித்து கண்ணாடியை உடைத்த யானை
x
தினத்தந்தி 20 Jan 2020 10:41 PM GMT (Updated: 20 Jan 2020 10:41 PM GMT)

திம்பம் மலைப்பாதையில் காரை மறித்த யானை ஒன்று அதன் கண்ணாடியை உடைத்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தாளவாடி,

சத்தியமங்கலத்தை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையானது தமிழகம் மற்றும் கர்நாடகத்தை இணைக்கும் முக்கியபாதையாக உள்ளது. இதனால் எப்போதும் இந்த பாதையில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கம். நேற்று முன்தினம் அதிகாலை தாளவாடியில் இருந்து கோவைக்கு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 5 பேர் இருந்தனர். திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது ேராட்டோரம் நின்று கொண்டிருந்த யானை திடீரென ஆவேசம் அடைந்த காரை வழி மறித்தது. உடனே காரின் டிரைவர் அதன் முகப்பு விளக்கை அணைத்தார். பின்னர் நைசாக காரை பின்னோக்கி நகர்த்தினார். இதில் ஆக்ரோஷம் அடைந்த யானையானது, காரின் முன்புற கண்ணாடியை உடைத்தது.

இதனால் காரில் இருந்தவர்கள் எந்தவித சத்தமும் போடாமல் அமைதியாக இருந்தனர். சிறிது நேரம் வரை காரின் அருகிலேயே நின்று கொண்டிருந்த யானை, பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து கார் அங்கிருந்து சென்றது. யானை வழி மறித்ததும், காரின் முகப்பு விளக்கை டிரைவர் அணைத்ததுடன், அதில் இருந்த 5 ேபரும் எந்தவித சத்தமும் போடாமல் அமைதியாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


Next Story