தண்டவாள பராமரிப்பு பணி: ஈரோடு வழியாக இயக்கப்படும் ரெயில் சேவையில் மாற்றம்


தண்டவாள பராமரிப்பு பணி: ஈரோடு வழியாக இயக்கப்படும் ரெயில் சேவையில் மாற்றம்
x
தினத்தந்தி 20 Jan 2020 11:09 PM GMT (Updated: 20 Jan 2020 11:09 PM GMT)

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு வழியாக இயக்கப்படும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு,

சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

வீரபாண்டி-சேலம் இடையே ரெயில்வே தண்டவாள பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட ரெயில்களின் சேவை நாளை (புதன்கிழமை) முதல் வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி கோவை-சேலம் பயணிகள் ரெயில் (வண்டி எண் 66602) ஈரோடு -சேலம் இடையேயும், சேலம் -கோவை பயணிகள் ரெயில் (வண்டி எண் 66603), சேலம் -ஈரோடு இடையேயும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் அலப்பி-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 13352) மகுடஞ்சாவடிக்கு 15 நிமிடம் தாமதமாக வரும்.

இதேபோல் திருப்பூர் -வஞ்சிபாளையம் இடையே ரெயில்வே பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பிப்ரவரி மாதம் 10-ந்தேதி வரை கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம்-கோவை பயணிகள் ரெயில் (வண்டி எண் 66603) ஈரோட்டில் இருந்து 45 நிமிடம் தாமதமாக புறப்படும். கோவை-பாலக்காடு டவுன் பயணிகள் ரெயில் (வண்டி எண் 66607) கோவையில் இருந்து 70 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் பிளாஸ்பூர்-எர்ணாகுளம் அதிவிரைவு ரெயில் (வண்டி எண் 22815) ஈரோடு-திருப்பூர் இடையே 45 நிமிடங்கள் தாமதமாகவும், திருச்சி-பாலக்காடு டவுன் பயணிகள் ரெயில் (வண்டி எண் 56713) ஈரோடு-திருப்பூர் இடையே 25 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படும்.

புதன்கிழமைதோறும் இயக்கப்படும், பிளாஸ்பூர்-திருநெல்வேலி அதிவிரைவு ரெயில் (வண்டி எண் 22619) ஈரோடு-திருப்பூர் இடையே 70 நிமிடங்கள் தாமதமாகவும், வியாழக்கிழமைதோறும் இயக்கப்படும், ஜெய்பூர்-கோவை அதிவிரைவு ரெயில் (வண்டி எண் 12970) ஈரோடு-திருப்பூர் இடையே 40 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story