இலவச துணிக்கான பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது - அமைச்சர் கந்தசாமி தகவல்


இலவச துணிக்கான பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது - அமைச்சர் கந்தசாமி தகவல்
x
தினத்தந்தி 21 Jan 2020 5:30 AM IST (Updated: 21 Jan 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

இலவச துணிக்கான பணம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, 

புதுவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின சமுதாயத்தினரில் 18 வயது நிரம்பியவர்களுக்கு இலவச துணிக்கு பதிலாக தலா ரூ.500-ம், சிவப்பு நிற ரேஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச துணிக்கு பதிலாக ஒவ்வொரு கார்டுக்கும் தலா ரூ.900-ம் வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் வழங்கினார். இதைத்தொடர்ந்து இலவச துணிக்கான பணம் நேற்று பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.

இதுகுறித்து சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நலத்துறை அமைச்சரின் பரிந்துரையின்பேரில் முதல்-அமைச்சர் மற்றும் கவர்னரின் ஒப்புதலின்பேரில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலமாக சிவப்பு நிற ரேஷன்கார்டுதாரர்களுக்கு இலவச துணிக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.900 மற்றும் தனிநபர் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.450-ம் அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் நபர் ஒன்றுக்கு தலா ரூ.500 குடும்ப தலைவரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு பொருட்களுக்கு ஈடான ரூ.170-ம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story