மாவட்ட செய்திகள்

குளித்தலை பெரியார் நகரில் சாக்கடை வசதி செய்து தர வேண்டும் நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் மனு + "||" + Public petition to municipal commissioner to provide sewage facility in Periyar town

குளித்தலை பெரியார் நகரில் சாக்கடை வசதி செய்து தர வேண்டும் நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் மனு

குளித்தலை பெரியார் நகரில் சாக்கடை வசதி செய்து தர வேண்டும் நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் மனு
குளித்தலை பெரியார் நகரில் சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
குளித்தலை,

குளித்தலை பெரியார் நகர் பகுதி பொதுமக்கள் மற்றும் நேதாஜி இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் ஒன்றிணைந்து குளித்தலை நகராட்சி ஆணையர்(பொறுப்பு) புகழேந்தியிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:- குளித்தலை பெரியார் நகர் பகுதி உருவாகி 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை இப்பகுதியில் கழிவுநீரை வெளியேற்ற சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் ஒவ்வொரு வீட்டின் முன்பும் கழிவுநீர் தொட்டி கட்டப்பட்டு கழிவுநீர் சேகரிக்கப்பட்டு கழிவுநீர் வெளியேற்றும் வாகனம் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கழிவுநீர் அப்புறப்படுத்தும் வாகனம் முறையாக வராத காரணத்தினால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தினந்தோறும் கழிவுநீர் அகற்றும் வாகனம் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியார் நகர் பகுதியில் சாக்கடை வசதி ஏற்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மைதானத்தில் குப்பைகள்

குளித்தலை பெரியார் நகரின் வடகிழக்கு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தூய்மை செய்து அதனை இளைஞர்கள், சிறுவர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த மைதானத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு எடுத்து செல்லப்படுகிறது. இதனால் இந்த மைதானம் முழுவதும் நெகிழி பைகள் மற்றும் குப்பைகள் காணப்படுகிறது.

இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தெரு நாய்களின் தொல்லையும் அதிகமாக இருக்கிறது. இப்பகுதியில் உள்ள சில குழந்தைகளையும், பெரியவர்களையும் நாய்கள் கடித்துள்ளன. எனவே, இந்த மைதானத்தில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து தரவேண்டும். வெறி நாய்களின் தொல்லையிலிருந்து பொதுமக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

பழுதடைந்த சாலை

இதேபோல, தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நகர செயலாளர் பிரபாகரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் அளித்த மனுவில், குளித்தலையில் பிரசித்தி பெற்ற கடம்பவனேஸ்வரர் கோவிலை சுற்றி உள்ள சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. குளித்தலையில் இருந்து புறவழி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் முக்கியமான இணைப்பு சாலையாக உள்ள இச்சாலை வழியாக ஆம்புலன்ஸ் முதல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

பழுதடைந்த இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த சாலையில் உள்ள பள்ளத்தில் வருகிற 27-ந் தேதி வாழைக் கன்றுகள் நடும் போராட்டம் நடத்தப்படவுள்ளது என கூறியிருந்தனர்.

தீப்பந்தத்துடன் போராட்டம்

குளித்தலை பகுதி மாணவர்கள்-இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பினர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், குளித்தலை- மணப்பாறை சாலையில் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள குளித்தலை ரெயில்வேகேட் முதல் கோட்டைமேடு வாய்க்கால் பாலம் வரை உள்ள சாலையில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சியில் மனு அளிக்கப்பட்டது.

ஆனால், இன்றுவரை மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. எனவே வருகிற 27-ந் தேதி மாலை 6 மணி முதல் குளித்தலை-மணப்பாறை சாலையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக மனுதாரர்களிடம் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கோவை மாநகர பகுதியில், சாப்பாடு இல்லாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு போலீசார் உதவி - 30 இடங்களில் உணவு வழங்க ஏற்பாடு
கோவை மாநகர பகுதியில் சாப்பாடு இல்லாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு, போலீசார் உதவி செய்வதுடன் அவர்களுக்கு 30 இடங்களில் உணவு வழங்க ஏற்பாடு செய்து உள்ளனர்.
2. கொரோனா வைரஸ் மிகப்பெரிய ஆபத்து பொதுமக்கள் அரசு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் - சரத்பவார் வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் மிகப்பொிய ஆபத்து, பொதுமக்கள் அரசு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.
3. ஷேர் ஆட்டோக்களை ஒருவழிப்பாதையில் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
ஷேர் ஆட்டோக்களை ஒருவழிப்பாதையில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. நன்னிலத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
நன்னிலத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுபிரியர்கள் கடையை திறக்க வலியுறுத்தி மது பிரியர்கள் கோ‌‌ஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனைவி விவாகரத்து கேட்ட வழக்கு வரும் 24ந்தேதிக்கு விசாரணை
நிர்பயா வழக்கு குற்றவாளி அக்ஷயின் மனைவி விவாகரத்து கேட்ட வழக்கு விசாரணை வரும் 24ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.