டெல்லியில் குடியரசு தினவிழாவையொட்டி பிரதமர் மோடியுடன் நடக்கும் கலந்துரையாடலில் பங்கேற்கும் ஆதிவாசி தம்பதி
பிரதமர் மோடி தலைமையில் 27-ந்தேதி நடக்கும் கலந்துரையாடலில் கர்நாடக மாநிலம் ஹாசனை சேர்ந்த ஆதிவாசி தம்பதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஹாசன்,
நாடு முழுவதும் வருகிற 26-ந்தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடக்கும் குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடி தேசிய கொடிேயற்றுகிறார். இதையடுத்து மறுநாள், அதாவது 27-ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ள பல்வேறு தரப்பு மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் 27-ந்தேதி நடக்கும் கலந்துரையாடலில் கர்நாடக மாநிலம் ஹாசனை சேர்ந்த ஆதிவாசி தம்பதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஹாசன் அருகே அங்கடிஹள்ளியை சேர்ந்த ஊராஜ், அவருடைய மனைவி சம்தோசே ஆகியோா் மோடியுடன் நடக்கும் கலந்துரையாடலில் பங்கேற்கிறார்கள். இயற்கை மருத்துவத்தை சேவையாக செய்து வருவதால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நேற்று மைசூருவில் வைத்து அவர்களுக்கு வழியனுப்பு விழா நடந்தது. அதில், ஆதிவாசி வளர்ச்சி ஆணைய இயக்குனர் பசவனகவுடா பங்கேற்று, பூங்கொத்து கொடுத்து அவர்களை வழியனுப்பினார். அவர்கள் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றனர். அந்த ஆதிவாசி தம்பதி, டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் தங்குகிறார்கள். இவர்கள் டெல்லி செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்துள்ளது.
Related Tags :
Next Story