மாவட்ட செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 15½ பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு + "||" + The police are searching for the mysterious persons who stole 15½ pound jewelry at the home of the real estate agent

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 15½ பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 15½ பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பெரம்பலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 15½ பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் தீரன் நகர் சாலை, தெற்கு அபிராமபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 58). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் ஒரு அறையிலும், அவரது மனைவி சரோஜாவும், இளைய மகன் வினோத்குமார் மற்றொரு அறையிலும், மூத்த மகன் பாரதிதாசன் தனது மனைவி கார்த்திகாவுடன் மற்றொரு அறையிலும் தூங்கியுள்ளனர்.


இந்நிலையில் பன்னீர்செல்வம், நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அறையில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், பணம் அடங்கிய பைகள் வீட்டின் வெளியே சிதறி கிடந்தன. ஆனால் அந்த பைகளில் இருந்த 15½ பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.

மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் அருகே உள்ள ஜன்னல் வழியாக கையை விட்டு, கதவை திறந்து உள்ளே புகுந்து, அறையில் இருந்த பீரோவையும் திறந்து, அதில் இருந்த பைகளை வெளியே எடுத்து வந்து, அதிலிருந்த நகை, பணத்தை திருடி கொண்டு பைகளை தூக்கி வீசி சென்றிருந்தது தெரியவந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்த தகவலின் பேரில், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பான புகாரின்பேரில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டில் ஆட்கள் இருந்த போதே நகை, பணத்தை திருடி சென்ற சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சீல் வைக்கப்பட்ட அரிசி ஆலையில் ரூ.10 லட்சம் எந்திரங்கள் திருட்டு - உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
வங்கி கடனை திரும்ப செலுத்தாததால் சீல் வைக்கப்பட்ட அரிசி ஆலையில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள எந்திரங்களை ஆலையின் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர் திருடிச்சென்றனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2. கோ.பூவனூர் வரதராஜ பெருமாள் கோவில் பூட்டை உடைத்து திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விருத்தாசலம் அருகே கோ. பூவனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. கண்டமங்கலம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
விழுப்புரம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
4. சேலத்தில், கள்ளச்சாவி போட்டு மளிகைக்கடையில் ரூ.1½ லட்சம் திருட்டு - தந்தை, மகன் கைது
சேலத்தில் கள்ளச்சாவி போட்டு மளிகைக்கடையில் ரூ.1½ லட்சம் திருடிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
5. எசனையில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
எசனை கிராமத்தில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.