ஈரோட்டில் போலி நிருபர்கள் 2 பேர் கைது


ஈரோட்டில் போலி நிருபர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2020 10:15 PM GMT (Updated: 22 Jan 2020 6:46 PM GMT)

ஈரோட்டில் போலி நிருபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, 

ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு நேற்று 2 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த செல்போனை வைத்து போலீஸ் நிலையத்தை வீடியோ எடுத்துள்ளனர். இதனால் போலீஸ் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியாக இருந்த போலீஸ் ஏட்டு செந்தில்குமார் அவர்களிடம் சென்று ஏன் போலீஸ் நிலையத்தை வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் தாங்கள் 2 பேரும் நிருபர்கள் என்று கூறி உள்ளனர். இதைத்தொடர்ந்து ஏட்டு செந்தில்குமார், போலீஸ் நிலையத்தை வீடியோ எடுக்க வேண்டும் என்றால், உயர் அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும், நீங்கள் யாரிடம் அனுமதி பெற்றுள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 2 பேரும் முறையாக பதில் கூறாமல், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அதனால் ஏட்டு செந்தில்குமார் இதுபற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்துக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து, 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர்கள், ஈரோடு பெரிய சடையம்பாளையத்தை சேர்ந்த சுரேந்திரன் (வயது 25)், வைராபாளையத்தை சேர்ந்த மோகன்குமார் (28) ஆகியோர் என்பதும், அவர்கள் 2 பேரும் போலி நிருபர்கள் என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ேபாலி நிருபர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story