குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினர் ஆத்தூரில் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினர் ஆத்தூரில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Jan 2020 4:30 AM IST (Updated: 23 Jan 2020 3:30 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி, ஆத்தூரில் இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆத்தூர்,

குடியுரிமை திருத்த சட்டம், மத்திய பா.ஜனதா அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, ஆத்தூர் வட்டார அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆத்தூர் பழைய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக நகர தலைவர் எம்.அப்துல் ஜப்பார் தலைமை தாங்கினார். காதர்மொய்தீன், முகமது ஜியா உல் ஹக், அமீர், அபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முகமது பயாஸ், தி.மு.க. நகர செயலாளர் கே. பாலசுப்ரமணியம், நகர காங்கிரஸ் தலைவர் முருகேசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கோபால்ராஜ், திராவிடர் கழக மாவட்டத்தலைவர் வானவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் நாராயணன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக குடியுரிமை சட்டத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தையொட்டி, ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story