ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற முடியாது அமைச்சர் காமராஜ் பேட்டி


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற முடியாது அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 23 Jan 2020 11:00 PM GMT (Updated: 23 Jan 2020 7:09 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற முடியாது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

சாலை பாதுகாப்பு வாரவிழாவினையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் காமராஜ்் கலந்து கொண்டு் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

விபத்துகள் குறைவு

வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும். வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது. சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு 63 ஆயிரத்து 920 ஆக இருந்த விபத்துகள் 57 ஆயிரத்து 228 ஆக குறைந்துள்ளன. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 964 விபத்துகள் என்ற நிலையி்ல் இந்த ஆண்டு 869 ஆக குறைந்துள்ளன. விபத்துக்களை குறைத்து விபத்தே இல்லாத நிலை உருவாக வேண்டும்.

இ்வ்வாறு அமைச்சர் பேசினார்்.

கையெழுத்து இயக்கம்

அதனை தொடர்ந்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

ஊர்வலத்தில் தனியார் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் மற்றும் 60 போலீசார் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை எந்தி சென்றனர். ஊர்வலமானது ரெயில் நிலையத்தில் தொடங்கி பழைய பஸ் நிலையம், பனகல் சாலை, தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது.

ஊர்வலத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதி்காரி பொன்னம்மாள், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், உதவி கலெக்டர் ஜெயப்பிரீத்தா, வாகன ஆய்வாளர் கருப்பண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிறைவேற்ற முடியாது

மக்கள் ஏற்காத ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த திட்டம் ஆனாலும் சரி, தமிழகத்தில் நிறைவேற்ற முடியாது என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன். எங்களை பொறுத்தவரை நாடகம் ஆட வேண்டிய அவசியம் கிடையாது. எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மீத்தேன் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டு இப்போது அதை எதிர்ப்பது போல் நாடகம் ஆடுகிறார்.

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை குறித்து சட்டமன்றத்திலேயே தீர்்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிப்போம்.

தவிர்க்க வேண்டும்

நாங்கள்(அ.தி.மு.க.வினர்) பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை வழிகாட்டிகளாக கொண்டு வந்தவர்கள். பெரியார் குறித்து தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story