பேரம்பாக்கம் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
பேரம்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடப்பட்டது.
திருவள்ளூர்,
பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி அந்தோணி பிரியா (வயது 43). இவர் தன்னுடைய வீட்டில் தையல் தொழில் செய்து வருகிறார். மேலும் மாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்தோணி பிரியா தன்னுடைய மாடுகளை அருகிலுள்ள வயலுக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றார். இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் தங்க நகை, ரூ.80 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து அந்தோணி பிரியா செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story